
கிருஷ்ண ஜெயந்தி போற்றி
கிருஷ்ணா போற்றி எங்கள் கிருஷ்ணா போற்றி கண்ணா கண்ணா என்று அழைத்தால், கனிவாய் வந்து அருள்வாயே… மண்ணில் பிறந்த மாதவனே, மனதில் என்றும் வாழ்வாயே! யசோதையின் மடியில் தவழ்ந்த யாதவனே எங்கள் கோகுல கண்ணா, வெண்ணெய் உண்ட கிருஷ்ணா, வெண்மதி போலே வந்தவனே! புல்லாங்குழல் இசை மீட்டும் புன்னகை கொண்ட பாலகனே, உன் திருநாமம் சொல்லும் நெஞ்சில் உலக துன்பம் மறையுமே! கோவர்த்தனம் குடையாய் தூக்கி கோபாலரை காத்தவனே, கோகுலத்தின் காவல் தெய்வம் கோவிந்தா நீயே கண்ணா! தர்மம் காக்க போர்க்களத்தில் தத்துவ கீதை தந்தவனே, வாழ்க்கை என்னும் தேரை நடத்தும் வாசுதேவா நீயே கண்ணா! அன்பு என்றால் நீயே கண்ணா, அருள் என்றால் நீயே கண்ணா, உண்மை வழியில் நடப்பவர்க்கு உறுதுணையாய் நிற்பாய் கண்ணா! கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் கிருஷ்ண நாமம் ஒலிக்கட்டும், கண்ணன் திருபாதம் நினைக்கும் உள்ளம் காலமெல்லாம் மலரட்டும்! கண்ணா கண்ணா என்று அழைத்தால், கருணையோடு வருவாயே… கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொன்னால், குறைகள் அனைத்தும் தீர்ப்பாயே! கோவிந்தா! கோபாலா! கிருஷ்ணா! கண்ணா! முகுந்தா! உன் திருவடி சரணம் கண்ணா! உன் திருவருள் சரணம் கண்ணா! கோவை குறிச்சி அய்யனார் சுவாமி அருளாசி பெற்று வாழ்வில் அனைவரும் சிறப்பாக வாழ்வோம். ஓம் அய்யனார் ஆதின ஆதிக்குருவே சிவபெருமானே போற்றி. ஓம் அய்யனார் ஆதீனத்தை காக்கும் மகாதேவா போற்றி ஓம் அய்யனார் சுவாமியே போற்றி. ஓம் அய்யனார் ஆதினமே போற்றி. ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் வாசு தேவாய நமஹ

