Song Cover Image

கோவி.மணிமாறனின் உன் நினைவுகள் என்ன வானவில்லா (Remastered)

உன் நினைவுகள் என்ன வானவில்லா உன் விழிகள் இரண்டும் கூர் வாளா? என் கனவுகள் யாவும் விண்மீனா? என் வாழ்க்கையில் நீ என்ன முழுநிலவா? என் தனிமையில் உந்தன் பிம்பங்கள் மன முகட்டினில் பாடும் கவிதைகள் என் உயிரில் கலந்த உணர்வுகள் என்றும் எனக்குள் ஆடும் தீபங்கள் ஓ..ஓ..ஓ..ஓ நீயும் நானும் ஒன்றாய் வாழ்ந்த காலம் தேனாய் இனி யாரும் காணா உறவாய் உலகில் வாழ்வோம் தனியாய்... (உன்) நான் எழுதிய முதல் கவிதை அதில் வரியாய் வந்த தேவதை உன் கூந்தல் ஆடும் அழகினில் நான் தொலைந்து போனேன் உலகினில் ஓ..ஓ…ஓ…ஓ.. நானும் நீயும் சேரும் இனிமை கொஞ்சும் காலம் நாளை இனிதாய் மலரும் கவலை இன்றி வாழ்வோம் (உன்) பூத்துக் குலுங்கும் மலராய் – நீ பனியில் நனைந்து நின்றாய் பூவைச் சுற்றும் வண்டாய் – நான் உன்னைச் சுற்றக் கண்டாய் ஓ..ஓ..ஓ காலம் நம்மைச் சேர்க்கும் கவலை வேண்டாம் கண்ணே காதல் உலகில் உள்ளவரை சாதல் இல்லை பெண்ணே (உன்)