
உலகம் போற்றும் வெற்றிகள் எங்களை தேடும் அதை உருவாக்கி தந்த பெருமை எங்கள் வேந்தரையே சாரும் இளம் வீரர்களின் நெஞ்சம் SRM ஐ தினம் நாடும் வெற்றி பதக்கங்கள் தோள்களில் ஏறி மாலைகளாய் மாறும் *chorus* வெல்வோம் வெல்வோம் எங்கள் வேந்தர்களின் இதயங்களை வெல்வோம் எந்த திசைகள் ஆனாலும் நிலைத்து ஆடி வென்று வருவோம் வெற்றியே எங்கள் இலக்கு என சபதம் கொள்வோம் இரவு பகல் பாராமல் தினம் உழைத்து நிற்போம் அணியின் வேற்றுமையை ஒன்று சேர்ந்து உடைத்து எறிவோம் எதிரிகளை ஆட்டத்தில் வென்று தெரிக்கவிடுவோம் முப்பது ஆண்டுகள் வெற்றி சரித்திரம் நாங்கள் படைத்தோம் ரத்தமும் சதையும், நாடி நரம்பும் முறுக்கேறி இனி சாதனை படைப்போம் உலகின் விளையாட்டு ராஜ்யம் SRM என உரக்க சொல்வோம் தோல்விகளை உடைத்து, புதிய வரலாற்றை படைத்து வென்று நிற்போம்.

